உனக்கு தெரியுமா..
எனக்குள் இருக்கும் சோகம்.. எதுவென்று..
உனக்கு தெரியுமா..
எனக்குள் இருக்கும் சோகம்.. இது என்று..
உனக்கு தெரியுமா..
என்னுள் வசிக்கும் சோகம்.. நீ என்று..
உனக்கு தெரியுமா..
உன்னை மறக்கும் சோகம்.. எனக்கென்று..
![]() |
மலரே! |
மலரேமலரே! உன்னை போல் நானும்
பூத்து குலுங்கினேன்..
பூமாலை ஆகும் முன்..
மலரே! உன்னை போல் நானும்
வாசமாய் இருந்தேன்..
வாழ்க்கை புரியும் முன்..
மலரே! இன்று ஏனோ..
வாடி கொண்டிருக்கிறேன்..
வாதைக்கப்பட்ட பின்..
மரணமே! உனை நான் தழுவ நெனைக்கையில்
நீயும் ஏன் என்னை விட்டு நழுவுகிறாய்..?
பூங்காவில் சிதறிய பறவைகள்..!
புயலில் சிக்கிய பூவணம்..!
போர்க்களத்தில் சேர்ந்திட்ட படைவீரர்..!
இது போல் தான் ..
நாம் கடைசியாய் சிந்திய புன்னகை..!
உனை நினைக்க முயற்சித்தேன்
நீயோ மறைந்தோடினாய்..
உனை மறக்க முயற்சித்தேன்
எண்ணில் நீழலாடினாய்..
நான் விரும்பிய அனைத்தும் தொலைவில்..
அன்று நிலா.. இன்று நீ..
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்
புரியும் வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான்
No comments:
Post a Comment